states

img

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு வழங்கப்பட்ட அவலம்!

உத்தரப் பிரதேசத்தில், கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு வழங்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் கபடி வீரர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அங்கேயே அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட அவலம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

;